சென்னை கொரட்டூர் மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் இரவில் இந்த சாலையில் பயணம் செய்யவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மேற்கூறிய சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?