மதுரை மாவட்டம் புதுமகாளிப்பட்டியில் உள்ள சாலைகள் சேதமடைந்து வாகனங்கள் ஓட்ட முடியாத வகையில் அமைந்துள்ளது. சேதமடைந்த சாலையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தினமும் தாமதமாக செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.