நாகை.மாவட்டம் வேதாரண்யம் பகுதி மருதூர் இரட்டைக்கடையடி கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தும் மூடப்படாமல் சாலையில் ஆபத்தான பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும்,இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?