சாலையை கடக்கவா? வேண்டாமா?

Update: 2022-05-13 14:21 GMT
சென்னை கோயம்பேடு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பிரபல திருமண மண்டபம் அருகே வரை இருக்கும் சாலையிலிருந்து எதிர் திசையில் உள்ள சாலையை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பாடியிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு இடையே முதியோர், பெண்கள், குழந்தைகள் மிகவும் ஆபத்தான முறையில் சாலையை கடக்கிறார்கள். எனவே சாலையின் இருபுறமும் போக்குவரத்து போலீஸ்சார் இருந்தால் பொதுமக்களால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். போக்குவரத்து துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்