நாகர்கோவில் மணியடிச்சான் கோவிலில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சேதமடைந்து மரண பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.