சாலையை ஆக்கிரமிக்கும் கம்பிகள்

Update: 2022-05-08 14:26 GMT
சென்னை தியாகராயர் நகர் பிரபல ஜவுளிக்கடை அருகில் இருக்கும் பிஞ்சாலா சுப்பிரமணியன் தெருவில் கட்டுமானப்பணி நடக்கிறது. ஆனால் கட்டுமானப்பணிக்கு தேவையான கம்பிகள் போன்ற பொருள்கள் சாலையின் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதால், இந்த இடத்தில் பயணம் செய்யவே மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் சாலையின் இரண்டும் பக்கத்திலும் வாகனம் வரும்போது இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் செய்திகள்