கல்வராயன்மலையில் உள்ள கரியாலூரில் இருந்து வெள்ளிமலை செல்லும் சாலையில் கோடை விழா அரங்கம் அருகே ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவு இருப்பது பற்றி வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இதனால் அங்கு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டியது அவசியம்.