பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பயணிகள் நிழற்குடை அருகே சாலையை அகலப்படுத்த மண் அகற்றப்பட்டது. ஆனால் சாலை அமைக்கப்படாததால், அந்த பகுதியில் மழை பெய்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.