ராசிபுரம் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து குருசம்பாளையம் வரை செல்லும் தார்சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் தினமும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலை மோசமான நிலையில் இருந்து வருவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
-குகன், குடுசம்பாளையம்