கூடலூர் மார்தோமா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த குழிகளை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.