பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே நரிக்கொல்லியில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அரசு பள்ளிக்கும் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகனங்களும் நடுவழியில் பழுதாகி நின்று விடுகின்றன. அதுவும், மழைக்காலத்தில் அந்த சாலையை பயன்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.