சங்கராபுரம் சமத்துவபுரத்திலிருந்து நெடுமானூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?