சென்னை புழல் மற்றும் காவாங்கரை பகுதியையும் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிராண்ட் லைன் அதை சுற்றியுள்ள பகுதிகளை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இந்த பாலம் புழல் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதோடு இதன் ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதை தற்காலிகமாக மண் கொட்டி மூடி வைத்துள்ளனர். எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன்பு பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.