கூடலூர் நகருக்குள் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதை சீரமைக்கும் பணிகள கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக சாலைகள் தொடர்ந்து சேதமடைந்த நிலையிலேயே கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.