மேல்புறம் சந்திப்பில் வெங்கனாங்கோடு வழியாக கடமக்கோடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இடைக்கோடு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிறிஸ்துதாஸ்,மேல்புறம்.