நாமக்கல் - சேலம் சாலையில் முதலைப்பட்டிபுதூரில் இருந்து மரூர்பட்டிக்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.