கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் பஸ்தி பிரிவு சாலை அருகே மாலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- எம்.சீனிவாசன், ஓசூர்.