கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா பட்டலப்பள்ளி ஊராட்சி சின்ன கொண்நம்பட்டி, கோடியூர், தெள்ளபண்டா, மாமரத்துகொட்டாய், கொங்கன் தெரு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், பர்கூர்.