நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டி வழியாக பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வழியே நடந்து செல்பவர், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-மோனலிசா, முத்துக்காப்பட்டி, நாமக்கல்.