நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- திருச்செங்கோடு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சில மாதங்களாக ஆண்டகளூர் கேட் முதல் குருசாமிபாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் குருக்கபுரம் பஸ் நிறுத்தம் வண்டிப்பேட்டை அருகே தனியார் பள்ளி அருகில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த வேகத்தடையில் உடனடியாக வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவா, நாமக்கல்