வேகத்தடைகள் அவசியமா?

Update: 2023-08-23 16:07 GMT

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் வேகத்தடைகள் உள்ளன. அரசு மகளிர் பள்ளி அருகில், புனித அன்னாள் பள்ளி அருகில், வனத்துறை அலுவலகம் அருகில், என பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. தற்போது கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையம் அருகில் மேலும் ஒரு வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அதிக வேகத்தடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். புதிதாக செல்பவர்கள் பலரும் வேகத்தடையில் வேகமாக சென்று விபத்தை சந்திக்கிறார்கள். எனவே அதிகாரிகள் நகருக்குள் இத்தனை வேகத்தடை அவசியமா? என ஆய்வு செய்து தேவையற்ற வேகத்தடைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷாஜகான், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்