சேலம் புங்கவாடியில் இருந்து கெங்கவல்லி செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை சாலை பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஜல்லி கற்களில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்க்கிறார்கள்.