பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-2) பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை பச்சை தேயிலையை வாகனத்தில் ஏற்றிச்செல்லும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் சாலை பழுதடைந்து கிடப்பதால், வாகனங்கள் நடுவழியில் பழுதாகி, நின்று விடுகின்றன. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.