கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி ரகமத் காலனியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் மேடுபள்ளமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்துக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதியதாக பேவர்பிளாக் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-புருசப்பன், ரகமத் காலனி, ராயக்கோட்டை.