ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

Update: 2023-08-20 17:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அம்மேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு பர்கூரில் இருந்து ஏமக்கல்நத்தம் செல்லும் சாலையில் இருந்து அம்மேரி கிராமத்திற்கு செல்லும் தார்சாலை உள்ளது. இந்த தார்சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலம் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளது. இச்சாலையை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நடந்து மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லவும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இச்சாலையை புதுப்பித்து தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

-மணி, அம்மேரி.

மேலும் செய்திகள்