பாலம் நடுவே பள்ளம்

Update: 2023-08-20 17:38 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட தரைவழிபாலம் உள்ளது. இதில் 23-வது பில்லர் மைய பகுதியில் சிமெண்ட கான்கிரீட் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனா். எனவே அந்த இடத்தை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

-கோவிந்தன், மோகனூர்.

மேலும் செய்திகள்