வேளாங்கண்ணியிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை தெரியாத அளவுக்கு இருப்பதால் அடிக்கடி வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வேதாரண்யம்