கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பல இடங்களில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கற்கள் வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த கற்களை முறையாக பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.