சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் இருந்து தெத்துக்காடு பகுதிக்கு செல்லும் இடைப்பட்ட சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பள்ளத்தை மூடுவதோடு, சாலையை விரிவுபடுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.