தஞ்சை கீழவாசல் பகுதி எஸ்.என்.எம்.நகரில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டு 1 மாதம் கூட நிறைவடையாத சூழலில் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறிக்கிடக்கிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.