முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-08-09 10:13 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிகளவில் முட்புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக புதர்கள் உள்ளதா? அல்லது பள்ளம் உள்ளதா? என தெரியாத வகையில் உள்ளதால் சாலையோரம் வாகனங்களை நிறுத்தும்போது பள்ளத்துக்குள் உருண்டு விழும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிவரும் நாட்களிலாவது புதர்களை அகற்ற முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்