ஆபத்தான பள்ளம்

Update: 2023-08-06 16:57 GMT

சேலம் சத்திரத்தில் இருந்து லீ பஜார் செல்லும் வழியில் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்க பள்ளத்தை அடையாளப்படுத்த கல் மற்றும் மரக்குச்சிகளை நட்டு வைத்துள்ளனர். ஆனால் வாகனங்களில் வரும்போது அந்த கற்களில் மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-ராமு, சேலம்.

மேலும் செய்திகள்