விபத்து அபாயம்

Update: 2023-08-06 13:04 GMT

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தோமா நகர், மாக்கமூலா, தொரப்பள்ளி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் காய்ந்த மூங்கில்கள் மற்றும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மூங்கில்கள் மற்றும் புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்