கோவில்பட்டி முகமதுசாலிகாபுரம், புதுகிராமம், சவுந்திரபாண்டியனார் தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.