சாலையை அகலப்படுத்தலாமே!

Update: 2023-08-02 16:29 GMT

நாமக்கல் மாவட்டம் அளவாய்ப்பட்டி அடுத்த தச்சன்காடு பகுதியில் இருந்து கோம்பைகாடு செல்லும் சாலை சேதமடைந்து இருந்தது. தற்போது புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மலை அடிவாரத்தில் குறுகிய வளைவுகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் திரும்பும்போது விபத்தில் சிக்கி வருகின்றன.. எனவே குறுகிய சாலையை விரிவுபடுத்தி வளைவுகளை நேர் செய்து சாலை அமைக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைந்து சாலையை அகலப்படுத்தி பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேல், அளவாய்ப்பட்டி.

மேலும் செய்திகள்