கிருஷ்ணகிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இந்த சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சின்னாறு, சாமல்பள்ளம், குருபரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் வேகத்தை குறைக்கும் வகையில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகனங்கள் கடக்கும் போது பயங்கரமாக வாகனங்கள் அதிர்ந்து பயணிகளை அச்சுறுத்துகிறது. அதேபோல வாகனங்களின் டயர்களும் பழுதாகும் சூழல் உள்ளது. எனவே அந்த சாலைகளில் உள்ள வேகத்தடைகள் அவசியம் தேவையா என அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, சாமல்பள்ளம், சூளகிரி.