திருவாரூர்-நாகை சாலையில் உள்ள மாவட்ட நூலகத்திற்கு செல்லும் வழி மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.