கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரக்குப்பம் ஊராட்சி கொட்லேட்டியில் இருந்து ஏர்கேட் வழியாக இருளர் காலனி செல்லும் சாலை, சின்ன ஏரி குட்டை பகுதியில் உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலையின் இரு புறங்களிலும் தடுப்பு சுவர் அமைத்து, புதர்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஜார்ஜ், பர்கூர், கிருஷ்ணகிரி.