குண்டும் குழியுமான சாலை

Update: 2023-07-30 10:21 GMT


திருப்பூர் மாநகராட்சி முத்தனம்பாளையம் பிரதான சாலை யோரமாக புதிய குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த குழாய்களில் தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்கும் நிலையில் அந்த குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் இன்று வரை இந்த சாலையை சீரமைக்கவில்லை.

எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்