சேலம் 29-வது வார்டு லண்டன் ஆர்த்தோ மருத்துவமனை இறக்கம் வழியாக சீதாராமன் செட்டி ரோடு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் சாலையின் நடுவே சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழியாக பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பாதாள சாக்கடையில் சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-சதீஷ், ரத்தினசாமிபுரம், சேலம்.