கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் இருந்து பெருமாள்பட்டிக்கு கண்மாய்கரை வழியாக செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் நிலைதடுமாறி கண்மாய்க்குள் பாய்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?