ஸ்ரீமுஷ்ணம் அருகே சேந்தாம்பட்டில் இருந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகி்ன்றனர். அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே விபத்தை தவிர்க்க சாலையை சீரமைப்பது அவசியம்.