தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர பஸ் நிலையம் பெரியார் சிலை பின்புறத்தில் உள்ள சாலை நடுவே பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வருபவர்கள் பள்ளத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.