சேந்தமங்கலத்தை அடுத்த மலை வேப்பன்குட்டை கிராமத்தின் அருகே ஆனாங்காடு, குட்டையூர் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு வருடமாக லாரிகளில் மண் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 10 லாரிகள் செல்கின்றன. இதனால் கிராமத்திற்குள் செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மலைவேப்பன் குட்டை கிராமத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்க 6 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அவ்வழியே செல்லும் மண் லாரிகள் நிறுத்தப்பட்டால் தான் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாலை அமைக்கும் பணி அங்கு தாமதமாகி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சேரன், வேப்பன்குட்டை, சேந்தமங்கலம்.