பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதியில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சாலையில் செல்பவர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பழுதடைந்து கிடக்கும் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.