தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி துவரங்குறிச்சி போந்தையன் தெரு தொடக்கப்பள்ளி அருகே கல்லணை கால்வாய் பிரிவு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் கீழ்கரை பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.