குலசேகரன்பட்டினம் ஐந்து வர்ணத்தெருவில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் வளைவில் சாலையோரம் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் உள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.