வெண்ணந்தூர் ஒன்றியம் நடுப்பட்டி செல்லும் சாலை வெள்ளைபிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி தேவேந்திரர் தெரு வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் பழைய அளவைவிட உயர்த்தி தார்சாலை அமைப்பதினால் மழைக்காலங்களில் பலரது வீடுகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை உயர்த்தாமல் பழைய அளவிலேயே தார்சாலை அமைக்க வேண்டும்.
-செல்வம், நடுப்பட்டி.