வேடசந்தூர் - கோவிலூர் சாலையில் உசிலம்பட்டியில் 3 இடங்களில் சாலையை தோண்டி பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என்ற இருளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை, வேகத்தடை அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் இரவில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பாலம் கட்ட சாலையை தோண்டிய பகுதி தெரியாமல் கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். எனவே இந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.