நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 1-வது வார்டு பகுதி தோப்புத்துறையிலிருந்து ஆற்காட்டுத்துறை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை